சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் முதல்முறையாக ஜப்பானில் வெளியான தமிழ் திரைப்படம். இந்த படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அங்கே மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உருவாவார்கள். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அங்கே டான்சிங் மகாராஜா என்றே அழைக்கிறார்கள். அதேபோல நடிகை மீனாவுக்கும் அங்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவானது.
முத்து படத்தை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் ஜப்பானிய ரசிகர்கள் ரஜினிக்கு உருவாகினார். ஒவ்வொரு முறை சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் வெளியாகும்போதும் ஜப்பானில் அந்த படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடுகின்றனர். குறிப்பிட்ட ரசிகர்கள் அந்த படத்தை பார்ப்பதற்காக இங்கே தமிழ்நாட்டிற்கு வந்து இங்குள்ள ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அவரைத் தொடர்ந்து வேறு எந்த ஒரு நடிகருக்கும் அங்கே மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் ஜப்பான் என்கிற பெயரிலேயே நடிகர் கார்த்தி ஒரு படத்தில் நடித்து வருகிறார் இயக்குனர் ராஜூமுருகன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்த தகவல் கொஞ்சம் கொஞ்சமாக ஜப்பானிலும் பரவ ஆரம்பித்தது. அந்த வகையில் ஜப்பானிலிருந்து சில ரசிகர்கள் இங்கே சென்னை கிளம்பி வந்து கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.
அதுமட்டுமல்ல கார்த்தியை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தனது நடிப்பால் எளிதில் அனைவரையும் கவர்ந்து விடும் வல்லமை கொண்ட கார்த்தி ஜப்பானிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியை தொடர்ந்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்குவார் என எதிர்பார்க்கலாம்.