விஜய் ஆண்டனியின் நடிப்பில் கடந்த வாரம் தமிழரசன் என்கிற படம் வெளியானது. படம் தயாராகி கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியானதாலோ என்னவோ எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான பிச்சைக்காரன்-2 திரைப்படம் வருமே 19ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது. அதனாலயே பிச்சைக்காரன் 2 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பை விஜய் ஆண்டனி சரியாக பயன்படுத்திக் கொண்டால் பிச்சைக்காரன் 2வும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பது உறுதி.
அதுமட்டுமல்ல இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளதுடன் படத்தை இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்பையும் அவரே கவனித்துள்ளார். இந்த நான்கு விஷயங்களை ஒரு குட்டி டி.ராஜேந்தர் போல இவர் மேற்கொண்டு உள்ளார் என்பதால் நிச்சயமாக இதை நான்கும் இவருக்கு கைகொடுக்கும் இடம் எதிர்பார்க்கலாம்.
பிச்சைக்காரன் 2 – ஆன்டி பிகிலி’ டிரெய்லர் ஏப்ரல்29, 2023 அன்று வெளியாகி குறுகிய காலத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதன் மூலம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்டைலான காட்சிகள், நேர்த்தியான எடிட்டிங், ‘பிச்சைக்காரன்’ படத்திற்கான சிக்னேச்சர் இசை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, விஜய் ஆண்டனியின் பிரமிக்க வைக்கும் திரை பிரசன்ஸ் உட்பட எண்ணற்ற அற்புதமான ஃப்ளாஷ் பாயிண்ட்களை டிரெய்லர் கொண்டுள்ளது.
அனைத்து மொழிகளிலும் வெளியாகி டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள் 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது இந்த படத்தில் காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜீ மகேந்திரன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.