தமிழ் திரை உலகில் தயாரிப்பாளர் சங்கத்திற்கோ, நடிகர் சங்கத்திற்கோ தேர்தல் நடக்கும் போதெல்லாம் முட்டல் மோதல், பிரச்சனை, நீதிமன்றம் என ஒரே பரபரப்பாக்க இருக்கும்.
ஆனால் இந்த அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய தொழிலாளர்களின் சம்மேளனமான பெப்சியின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் நடக்கும்போதெல்லாம் எந்தவித பரபரப்பும் எழுந்ததில்லை.
எப்போதுமே அங்கு உள்ளவர்கள் இயக்குனர் ஆர்கே செல்வமணியைத்தான் தங்களது தலைவராக எந்த போட்டியும் இன்றி தேர்ந்தெடுத்து வருகின்றனர். காரணம் இயக்குனர் செல்வமணி அனைத்து தரப்பினருக்கும் சரியாக ஊதியம் கிடைக்க வேண்டும், யாருக்கும் பாரபட்சம் காட்டப்படக்கூடாது என்பதில் எப்போதுமே கருத்தாக இருப்பவர்.
அதனால் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணக்கமாக இருந்து பெப்சி தொழிலாளர்களுக்காண தேவைகளை சரியாக நிறைவேற்றி வருகிறார்.
அதனால் தற்போது நடைபெற்றுள்ள பெப்சி தொழிலாளர்கள் சங்க தேர்தலிலும் எந்தவித போட்டியும் இன்றி இயக்குனர் ஆர்கே செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.