Home News Mollywood அயோத்தி திரைப்படம் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு

அயோத்தி திரைப்படம் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு

நடிகர் சசிகுமார் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் அயோத்தி. அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இந்த படத்தை இயக்கி இருந்தார். கடந்த சில வருடங்களாக சசிகுமார் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் வெளியான அயோத்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அந்த வகையில் சசிகுமாரின் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படமாகவும் இது அமைந்துவிட்டது. மதங்களைக் கடந்து மனிதம் வளர்க்க வேண்டும் என்கிற கருத்துடன் உருவாகி இருந்த இந்த படம் சசிகுமார் மனதிற்கு மிக நெருக்கமான படமாக அமைந்துவிட்டது.

படத்திற்கு பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. இந்த நிலையில் லேட்டானாலும் லேட்டஸ்ட் என்பது போல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அயோத்தி படத்தை பார்த்து விட்டு சசிகுமார் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

இதுகுறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர்.மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!” என்று கூறியுள்ளார்.

“நடிகர் என குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார்” என்று பதிலுக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் சசிகுமார்.