இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி முதல்முறையாக சினிமா தயாரிப்பிலும் அடியெடுத்து வைத்துள்ளார். அவரும் அவரது மனைவியும் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதல் படைப்பை தமிழில் தயாரிக்கின்றனர்.
லெட் கேட்ஸ் மேரீட் அதாவது எல்ஜிஎம் என இந்தப்படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்க, கதாநாயகியாக லவ் டுடே புகழ் இவானா நடிக்கிறார்.
முக்கிய வேடங்களில் நதியா, யோகி பாபு, மிக்சி விஜய் உங்கிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் எம்.எஸ் தோனி இன்று வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தை இசையமைப்பாளரும் இயக்குனருமான ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பின்னணி வேலைகளை தொடங்க இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.