நடிகை குஷ்பு சமீப நாட்களாக ரொம்பவே ஆக்டிவாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றிருந்த இவர் நடிகர் ராம்சரணின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதுடன் ஆஸ்கர் விருது பெற்ற ராஜமவுலி, மரகதமணி உள்ளிட்டோரையும் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அந்த சமயத்தில் அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட ஹைதராபாத்தில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் கடந்த வெள்ளியன்று அனுமதிக்கப்பட்டார். கடுமையான காய்ச்சல் உடல் வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறியவர், உங்கள் உடல் உங்களிடம் ஏதாவது சொன்னால் தயவு செய்து அதை நிராகரிக்காதீர்கள் என்று கூறியதுடன் நான் விரைந்து குணமாகி வருகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது பூரண உடல் குணமடைந்துள்ள குஷ்பு சென்னை திரும்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டேன். சில நாட்களுக்கு என்னுடைய பயணங்களை தவிர்க்க வேண்டும். உங்கள் அன்புக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.