இந்த வருடம் அதுவும் குறிப்பாக இந்த ஏப்ரல் மாதம் வரலாற்று படங்கள் அணிவகுத்து வெளியாக இருக்கின்றன. அந்த வகையில் புராண காவியமான சாகுந்தலம் அழகிய திரைப்படமாக உருவாகி வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய ஆக்சன் படங்களை கொடுத்தவரும் ருத்ரமாதேவி என்கிற வரலாற்று படத்தை கொடுத்தவருமான இயக்குனர் குணசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அது மட்டுமல்ல இந்த படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளது இந்த படத்திற்கான பிளஸ் பாயிண்ட் ஆக கருதப்படுகிறது. கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் பிரகாஷ்ராஜ், மோகன்பாபு, கௌதமி, மதுபாலா, அதிதி பாலன் ஆகியோ நடித்துள்ளனர், இரண்டரை மணி நேரம் ஓடும் இந்த படத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர காட்சிகள் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ளன. இது படம் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய காட்சி விருந்தாக இருக்கும்,

இந்த நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவு தற்போது தியேட்டர்களில் துவங்கியுள்ளது, தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இந்தப்படம் ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு பரிசாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.