குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். அதன்பிறகு வளர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும் சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் இளம் வயது பவானி கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாஸ்டர் மகேந்திரனுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன. தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார் மகேந்திரன்.
அந்த வகையில் தற்போது அவர் கதாநாயகனாக நடித்துள்ள படம் ரிப்பப்பரி. இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோ.பிள் ஜேம்ஸ், மாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிராம பின்னணியில் யூட்யூப் குக்கிங் சேனல் நடத்தி வரும் மூன்று இளைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களை பற்றியது தான் இப்படத்தின் கதை. 6 முதல் 60 வயது வரை அனைவரும் ரசிக்கும் வகையில் காமெடி டிராமா கலந்த, அசத்தலான ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது.
முக்கியமாக ஒரே வீட்டுக்குள் நடக்கிற வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், மாறுபட்ட வித்தியாசமான திரைக்கதையில் நிறைய திருப்பங்களுடன் ரசிகர்களை அசத்த வருகிறது
அந்த வகையில் இந்த படம் மாஸ்டர் மகேந்திரனை மாஸ் மகேந்திரன் ஆக்குமா, குட்டி பவானியை பெரிய பவானி ஆக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.