நீண்ட நாட்களாக காதலித்து வந்த நயன்தாரா, சிவன் இருவரும் கடந்த வருடம் திருமண பந்தத்தில் இணைந்தனர். அதேசமயம் திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில் வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராக மாறி மிகப்பெரிய அதிர்வலைகளையும் இவர்கள் ஏற்படுத்தினர்.

அது குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் தங்களது இரு குழந்தைகளையும் வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் அவப்போது தனது குழந்தைகளுடன் தாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இவ்வளவு நாள் வரை இந்த குழந்தைகளுக்கு இவர்கள் பெயர் சூட்டாமல் இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர், உலகம் என பெயர் வைத்துள்ளனர்.

ஒரு ஆண் குழந்தைக்கு உயிர் ருத்ர நீல் என்.சிவன் என்றும் இன்னொரு குழந்தைக்கு உலக் தெய்வீக என்.சிவன் என்றும் பெயர் சூட்டியுள்ளனர். உயிரையும் உலகையும் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தங்களது குழந்தைகளுக்கு இந்த பெயரை அவர்கள் சூட்டி உள்ளதாக தெரிகிறது.