வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி கதையின் நாயகனாக, நடிக்க விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேற்று வெளியானது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படம் வெளியான முதல் காட்சியில் இருந்தே ரசிகர்களின் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது.
படம் பார்க்கும் அனைவருமே இந்த படம் குறித்து பாசிட்டிவாக கருத்துக்களை கூறி வருகின்றனர். இதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இந்த படத்திற்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவை நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து இந்த வெற்றி குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
அது மட்டுமல்ல இந்த படத்தில் காடு, மலை, வெயில் என்றும் கடும் உழைப்பை கொட்டி பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வெற்றிமாறன் தங்க நாணயம் பரிசாக வழங்கினார்.
இதற்கு முன்னதாக தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனைவருக்கும் செங்கல்பட்டு அருகில் உள்ள ஒரு பகுதியில் ஆளுக்கு ஒரு கிரவுண்டு நிலத்தை பரிசாக சில நாட்களுக்கு முன்பு தான் வெற்றிமாறன் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.