V4UMEDIA
HomeNewsKollywoodவிஜய்சேதுபதியுடன் வெப் சீரிஸுக்காக கைகோர்த்த காக்கா முட்டை மணிகண்டன்

விஜய்சேதுபதியுடன் வெப் சீரிஸுக்காக கைகோர்த்த காக்கா முட்டை மணிகண்டன்

தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரித்த காக்கா முட்டை படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மணிகண்டன். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற இவர் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை என்கிற படத்தை இயக்கி அதிலும் பாராட்டுகளை பெற்றார்.

கடந்த வருடம் விஜய்சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் கடைசி விவசாயி என்கிற படத்தையும் இயக்கி இருந்தார் மணிகண்டன். இந்த நிலையில் தற்போது முதன்முதலாக வெப்சீரிஸ் ஒன்றை இயக்குகிறார் மணிகண்டன்.

ஏற்கனவே விஜய்சேதுபதி பார்சி என்கிற வெப்சீரிஸ் மூலமாக அந்த உலகத்திற்குள் நுழைந்துவிட்டார். தற்போது தன்னை படங்களில் இயக்கிய மணிகண்டனுடன் இந்த வெப்சீரிஸுக்காக கைகோர்த்துள்ளார் விஜய் சேதுபதி.

ராஜேஷ் முருகேசன் இசையமைக்கும் இந்த வெப் சீரீஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது. இதற்கான துவக்க விழா பூஜை உசிலம்பட்டியில் நடைபெற்றுள்ளது.

Most Popular

Recent Comments