தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது சிறு வயது முதல், அவர் அரசியலில் வளர்ந்து வந்த விதம் மற்றும் அரசியல் அனுபவம், கடந்து வந்த பாதை என கடந்த 70 வருடங்களில் அவரது வாழ்க்கையை ஒரு அருமையான புகைப்பட கண்காட்சியாக மதுரையில் வைத்துள்ளார்கள். இந்த கண்காட்சியை நடிகர் விஜய்சேதுபதி பார்வையிட்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘இந்த புகைப்பட கண்காட்சிக்கு இன்று கடைசி நாள் என்பதால் இதை மிஸ் பண்ண கூடாது என்பதற்காக வந்தேன். இந்த புகைப்படங்களை எல்லாம் பார்க்கும்போது அவர் ஒரு முதல்வரின் மகன் என்பதால் மட்டுமே அரசியலுக்குள் நுழைந்து விடவில்லை. கடுமையான உழைப்பை கொடுத்து தான் அவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

இதை ஒரு லட்சம் பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள் என்றால் இதற்கு முன்பு அவர்கள் தமிழக முதல்வரை பற்றி மனதில் என்ன நினைத்து வைத்திருப்பார்களோ, இந்த புகைப்படங்களை பார்க்கும்போது அவர்களுடைய எண்ணம், சிந்திக்கும் கோணம் எல்லாம் மாறும். நம்மை ஆள்பவர்களை பற்றி நாம் தெரிந்து வைத்துக் கொள்வது உண்மையிலேயே நல்லது தான். இந்த புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்ற பல புகைப்படங்கள் என்னை ஆச்சரியப்படுத்தின” என்று கூறியுள்ளார்.