சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தின் ஹிட் ஆன ஆஹா கல்யாணம் மற்றும் விஜய் நடிப்பில் வெளியாக பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் கு.கார்த்திக்.
இந்த நிலையில் இவர் தற்போது அங்காரகன் என்கிற படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சத்யராஜ், ஸ்ரீபதி ஆகிய நடித்துள்ள இந்த படத்தின் இசை ஆல்பம் வரும் மார்ச் 29ஆம் தேதி ட்ரெண்ட் மியூசிக்கின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

சத்யராஜின் கதாபாத்திரத்தை சுற்றிவரும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீபதி, நியா, ரெய்னா காரத் அங்காடித்தெரு மகேஷ் மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் தயாரிப்பாளர் ஜோமோன் பிலிப் கூறும்போது, “இந்த படம் ஒரு ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி இருந்தாலும் அதேசமயம் பாடல்கள் இந்த படத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் இந்த படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளதுடன் வரும் சம்மரில் இந்த படம் ரிலீசுக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்பதியும் உறுதிப்படுத்தியுள்ளார்