சமந்தாவின் நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து தெலுங்கில் அவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்திற்கு மலையாளத்தில் ஹிருதயம் என்கிற படத்திற்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்த ஹேசம் அப்துல் வகாப் என்பவர் இசையமைத்து வருகிறார்.
இவர்களுடன் ஜெயராம், சச்சின் கடேகர், முரளி சர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்றும் ஆறு மாதங்களுக்கு முன்பே தற்போது ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர்.