அமரர் கல்கி எழுதி கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக பல லட்சம் வாசகர்களால் புத்தகமாக படிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலுக்கு கடந்த வருடம் இயக்குனர் மணிரத்னம் திரை வடிவம் கொடுத்து உருவாக்கினார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது தொடங்கியுள்ளன. அந்த விதமாக இன்று இந்த படத்தில் இருந்து அகநக என்கிற பாடல் வெளியாகி உள்ளது.
இந்த பாடலை ரசிகர்கள் கேட்டு ரசித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இயக்குனர் மணிரத்னமும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் லண்டனில் முகாமிட்டு இந்த படத்தில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனில் உள்ள ஒபே ரோடு ஸ்டுடியோஸ் என்கிற இடத்தில் இதற்கான இசை கோப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கிருந்து வெளியாகி இருக்கும் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் புகைப்படங்கள் இதை உறுதிப்படுத்தி உள்ளன.