V4UMEDIA
HomeNewsKollywoodகேம் ஆன் படம் மூலமாக தமிழில் ஹீரோ-இயக்குனராக அறிமுகமாகும் அண்ணன் - தம்பி

கேம் ஆன் படம் மூலமாக தமிழில் ஹீரோ-இயக்குனராக அறிமுகமாகும் அண்ணன் – தம்பி

இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் செல்வராகவன்-தனுஷ், மோகன்ராஜா-ஜெயம் ரவி என அண்ணன்கள் தங்களது தம்பிகளை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி, தாங்கள் அந்த படத்தை இயக்கியதை பார்த்துள்ளோம். ஆனால் தற்போது முதன்முறையாக அண்ணன் கதாநாயகனாகவும் தம்பி இயக்குனராகவும் இணைந்து உருவாக்கியுள்ள கேம் ஆன் திரைப்படம் உருவாகியுள்ளது

படத்தின் நாயகனாக கீதானந்த் நடிக்க அவரது தம்பி தயானந்த் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். நாயகியாக நேகா சோலங்கி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மதுபாலா, ஆதித்யா மேனன், சுபலேகா சுதாகர், வசந்தி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  அபிஷேக் ஏ.ஆர் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை அர்விந்த் மேற்கொள்ள, படத்தொகுப்பை வம்சி அட்லூரி கவனிக்கிறார்.

ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக இருக்கும் கதாநாயகன் திடீரென வேலையை இழக்கிறான். அவனுடைய நண்பனும் பெண் தோழியும் இவனுக்கு துரோகம் செய்கிறார்கள். இந்த நிலையில் எதிர்பாராத மர்ம நபர் ஒருவர் மூலமாக ஒரு வித்தியாசமான விளையாட்டில் ஈடுபடுத்தப்படுகிறான் நாயகன். அதில் ஒவ்வொரு விளையாட்டை நிறைவு செய்யும்போதும் பணம் கிடைக்க உற்சாகமாகிறான்.

ஆனால் ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டு அவளை கொலை செய்யும் அளவிற்கு கொண்டு செல்கிறது. அதை செய்தானா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை. இதை விறுவிறுப்பாக இரண்டு மணி நேர படமாக இயக்கியுள்ளார் தயானந்த்.

Most Popular

Recent Comments