மாஸ்டர் என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் அதிரடி கூட்டணியில் இரண்டாவதாக உருவாகி வரும் படம் லியோ. கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து நடிகை திரிஷா இந்த படத்தில் விஜய்யுடன் ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார். பிரியா ஆனந்த், அபிராமி வெங்கடாசலம் இயக்குனர்கள் மிஷ்கின், கௌதமேனன் ,மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் நடிகர் மிஷ்கினும் கலந்து கொண்டு நடித்து வந்தார். இந்த நிலையில் காஷ்மீர் படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் லியோ படக்குழுவினர் சென்னை திரும்பினர்.
இந்த படப்பிடிப்பில் இயக்குனர் இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “உங்களுடன் நெருங்கிய திறனுடன் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாகவும் அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்த ஒரு மில்லியன் நன்றிகள் போதாது. நீங்கள் படப்பிடிப்பில் இருந்ததை நாங்கள் மிகவும் வியப்படன் பார்த்தோம். நான் உங்களுக்கு ஒருபோதும் போதுமான நன்றி சொல்ல முடியாது ஆனால் ஒரு மில்லியன் நன்றி” என்று கூறியுள்ளார்.