V4UMEDIA
HomeNewsKollywoodலவ் டுடே இந்தி ரீமேக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லவ் டுடே இந்தி ரீமேக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே ரசிகர்கள் விரும்பும்படியான ஒரு படத்தை கொடுத்ததால் அடுத்த அவர் இயக்கிய லவ் டுடே திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அந்த படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார் என்றதும் எதிர்பார்ப்புடன் சந்தேகமும் எழுந்தது.

ஆனால் அவற்றையெல்லாம் அடித்து தகர்த்து மிகப்பெரிய அளவில் அந்த படம் மூலம் ஒரு புரட்சியை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஏற்படுத்திவிட்டார் என்று சொல்லலாம். கிட்டத்தட்ட 100 நாட்கள் ஓடி 100 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனையை செய்தது லவ் டுடே திரைப்படம்.

அந்த படத்தின் வித்தியாசமான கதையம்சம், இளம் ரசிகர்களை ஈர்க்கும் காட்சி மற்றும் வசனங்கள் என படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. தெலுங்கிலும் அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவைப்பை பெற்றது.

ஹிந்தியிலும் அந்த படம் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படலாம் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஹிந்தியில் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து பிரபல பாலிவுட் நிறுவனமான பாந்தோம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இதுகுறித்த அறிவிப்பையும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்தியில் பிரதீப் ரங்கநாதனே இயக்கி நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Most Popular

Recent Comments