V4UMEDIA
HomeNewsKollywoodநீலம் புக்ஸ் விற்பனையகத்தை துவங்கி வைத்த கமல்

நீலம் புக்ஸ் விற்பனையகத்தை துவங்கி வைத்த கமல்

அட்டகத்தி படத்தின் மூலம் தனது முதல் படத்திலேயே கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியவர் இயக்குனர் பா ரஞ்சித். அதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்த இரண்டு படங்களை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்று முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

மேலும் தன்னிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றுபவர்களுக்கும் நல்ல படைப்புகளை கையில் வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடிவரும் உதவி இயக்குனர்களுக்கும் உதவும் விதமாக நீலம் புரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி படங்களை தயாரித்தும் வருகிறார்.

இந்த நிலையில் இந்தக்கால இளைஞர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தற்போது நீலம் புக்ஸ் என்கிற விற்பனையாகத்தை எக்மோரில் துவங்கியுள்ளார் இயக்குனர் பா ரஞ்சித்.

இந்த விற்பனை நிலையத்தை நடிகர் கமல் இன்று திறந்து வைத்தார். நீலம் புக்ஸ் புத்தக விற்பனையகம் அனைத்து விதமான கலை பண்பாட்டு இலக்கிய செயல்பாடுகளுக்கான தளமாக இயங்க உள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கமல் பேசும்போது, “பா ரஞ்சித்தின் ஆரம்ப விழாக்களில் எல்லாம் நான் கலந்து கொள்ளவில்லை. ஆனால் நானும் அவரும் இல்லாதபோது இருக்கும் தாக்கம் இது. அரசியலில் என்னுடைய முக்கியமான எதிரி சாதிதான். நான் அதை இன்று சொல்லவில்லை.. 21 வயதிலிருந்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன்..

இது எனக்கு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் இருந்த அம்பேத்கர் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.. ஆனால் இன்றும் நடந்த பாடில்லை. எழுத்து வேண்டுமானால் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் மையமும் நீலமும் ஒன்றுதான்” என்று பேசினார் கமல்.

Most Popular

Recent Comments