V4UMEDIA
HomeNewsKollywood60 வருடத்திற்கு முந்தைய பாடலின் ரீமிக்ஸ்-க்கு நடனமாடும் ராகவா லாரன்ஸ்

60 வருடத்திற்கு முந்தைய பாடலின் ரீமிக்ஸ்-க்கு நடனமாடும் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் முன்பை விட தற்போது விறுவிறுப்பாக இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் ருத்ரன், இன்னொரு பக்கம் சந்திரமுகி 2, ஜிகர்தண்டா-2 ஆகிய படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ருத்ரன் படத்தை பொல்லாதவன் ஆடுகளம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர்களான பைவ்ஸ்டார் கதிரேசன் இயக்குனராக மாறி இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

ஜிவி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பொதுவாக தமிழ் சினிமாவில் அவ்வப்போது பழைய படங்களின் ஹிட்டான பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இடம் பெறுவது வழக்கம்.

அந்த வகையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது இந்த ருத்ரன் படத்தில் பாடாத பாட்டெல்லாம் என்கிற பழைய ஹிட் பாடல் ஒன்று ரீமேக் செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளது.

இந்த பாடல் பிப்ரவரி 11ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. 1962-ல் வெளியான வீரத்திருமகன் என்கிற படத்தில் கதாநாயகன் ஆனந்தன் பாடும் விதமாக உருவாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த பாடல் 60 வருடங்களுக்குப் பிறகு ரீமிக்ஸ் செய்யப்படுகிறது என்பது ஆச்சரியம் தான்.

இந்த பாடலின் ஹைலைட் என்னவென்றால் அந்த பாடலுக்கு நடிகர் ஆனந்தன் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடியே கிடாரை கையில் வைத்துக்கொண்டு பெர்பார்மன்ஸ் செய்திருப்பார். ஆனால் நடனத்திற்கு பெயர் போன ராகவா லாரன்ஸ் இந்த பாட்டிற்கு தனது வித்தியாசமான நடனத்தால் வேறு வடிவம் கொடுத்திருப்பார் என்பதை சொல்லவும் தேவையில்லை .

Most Popular

Recent Comments