நடிகர் தனுஷ் முதன்முறையாக தெலுங்கு திரை உலகில் நேரடி யாக நடித்துள்ள படம் சார் தமிழில் வாதி என்கிற பெயரிலும் ஒரே நேரத்தில் இரு மொழி படமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தை பிரபல இளம் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
சமுத்திரக்கனி வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் அதை தொடர்ந்து ஹைதராபாத்திலும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தனுஷ்.
இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசும்போது முதலில் தெலுங்கில் பேச ஆரம்பித்தார். பேசும்போதே எனக்கு தெலுங்கு அவ்வளவாக தெரியாது என்று கூறிவிட்டு சில வார்த்தைகள் தெலுங்கில் பேசினார். பின்னர் உங்களுக்கு எல்லோருக்கும் புரியும் விதமாக எங்கோ இருக்கும் ஆங்கில மொழியில் பேசுவதற்கு பதிலாக நமது பக்கத்து மாநிலத்தில் இருக்கும் எனது தமிழ் மொழியில் பேசுகிறேன் என்று கூறி அந்த நிகழ்ச்சியில் முழுவதுமாக தமிழிலேயே பேசினார்.
இதற்கு அரங்கில் அமர்ந்திருந்த தெலுங்கு பார்வையாளர்களிடம் கரகோசத்துடன் கூடிய வரவேற்பு கிடைத்தது. தெலுங்கிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.