எண்பதுகளின் இறுதியில் இயக்குனர், ஹீரோ என ஒரே சமயத்தில் அறிமுகமாகி கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்த இரண்டு துறையிலும் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் பார்த்திபன். இதற்கு முன்னதாக கடந்த சில வருடங்களில் ஒத்த செருப்பு மற்றும் இரவின் நிழல் என வித்தியாசமான முயற்சிகளாலான படங்களை இயக்கி பல சர்வதேச விருதுகளையும் பெற்றார். இந்த வயதிலும் இவரது புதுப்புது முயற்சிகளுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவே செய்கிறது.
இன்னொரு பக்கம் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட வரலாற்று படங்களிலும் முக்கியமான தேர்வாக பார்த்திபன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது சில நாட்களுக்கு முன்பு, தான் அடுத்த படத்தை துவக்க இருப்பதாக கூறி ஒரு புத்தகத்தில் மயிலிறகை வைத்தபடி படத்தின் பெயரை கூறுபவர்களுக்கு புடவை பரிசு என்று ஒரு போட்டியை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு 52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு எனது டைட்டில் வைத்து அறிவித்துள்ளார் பார்த்திபன்.
எப்போதுமே வித்தியாசமான யோசனைகளுக்கு பேர் போன பார்த்திபன் இப்போது வரை அதை தொடர்கிறார் என்பது ஆச்சரியம் தான்.