கன்னடத்தில் உருவாகி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியா மட்டும் அல்லாது இந்தியிலும் சேர்த்து பான் இந்தியா படமாக வெளியான படம் கே ஜி எப். யஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் பிரசாத் நீல் இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் கடந்த வருடம் கே ஜி எப் 2 என்கிற பெயரில் வெளியாகி முதல் பாகத்தை விட அதிக அளவில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு பாகங்களின் வெற்றியால் இயக்குனர் பிரசாந்த் நீல் பாலிவுட் கூட விரும்புகின்ற அளவிற்கு மிகப்பெரிய இயக்குனராக மாறிவிட்டார். தற்போது அவர் பிரபாஸை வைத்து சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
பெரும்பாலும் திரையுலக பிரபலங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் குறிப்பாக ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருவார்கள். இயக்குனர் பிரசாந்த் நீலும் அப்படிப்பட்ட ஒருவர்தான். ஆனால் தற்போது திடீரென தனது ட்விட்டர் பக்கத்தை விட்டு வெளியேறியுள்ளார் பிரசாந்த் நீல். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கேஜிஎப் பட ஹீரோ யஷ்ஷுக்கு பிரசாந்த் நீள் உருது மொழியில் பிறந்தநாள் வாழ்த்து செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது கன்னட ரசிகர்களின் கோபத்தை கிளறிவிட்டு அவருக்கு எதிராக கமெண்ட்களையும் கிண்டல் கருத்துக்களையும் வெளியிட துவங்கினர். இதனைத் தொடர்ந்தே பிரசாந்த் நீல் ட்விட்டர் பக்கத்தை விட்டு வெளியேறி உள்ளார் என்று சொல்லப்படுகிறது.