ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்து படம் வெளியாகி ஒரு மிகப்பெரிய இடைவெளி விழுந்துவிட்டது என்று சொல்லலாம். அதை சரிசெய்யும் விதமாக அடுத்ததாக அவர் நடித்துள்ள கள்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரையிட தயாராகி வருகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக லவ்டுடே புகழ் இவானா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். ஏற்கனவே நாச்சியார் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்த இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தீனா, கு.ஞானசம்பந்தம், வினோத் குமார் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் பிவி சங்கர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவையும் அவர்தான் மேற்கொண்டுள்ளார்.
ராட்சசன் படத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி டில்லிபாபு இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது ஒரு பக்கம் இருக்க, இந்த படம் காமெடி அட்வென்சர் ட்ராமாவாக உருவாகி உள்ளது என்பது இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் போஸ்ட் புரடொக்சன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதி, படம் ரிலீஸ் ஆகும் தேதி ஆகியவை அறிவிக்கப்பட உள்ளது.