விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ ஜூன் 27 வியாழக்கிழமை திரைக்கு வருகிறது. இந்த படம் கிட்டத்தட்ட ஒரு மாத கால தாமதத்திற்குப் பிறகு அதன் வெளியீட்டு தேதியைக் உறுதிப்படுத்தியுள்ளது .
படத்தின் இணை தயாரிப்பாளரான வாசன் மூவிஸின் ஷான் சுதர்சன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் சிந்துபாத் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளி வரும் என அறிவித்தார்.
கே புரொடக்ஷனின் ராஜராஜன் மற்றும் வாசன் மூவிஸ் ’ஷான் சுதர்சன் இணைந்து தயாரித்த சிந்துபாத் முதலில் மே மாதத்தில் வெளிவருவதாகவும் பின்னர் ஜூன் 21 ஆம் தேதி வெளியிடப்போவதாகவும் கூறினர்.
பாகுபலி படத்தின் தயாரிப்பாளரான ஆர்கே மீடியா ஒர்க்ஸ் நிறுவனம், கே புரொடக்ஷன்ஸின் எஸ்.என்.ராஜராஜன் மீது வழக்கு பதிவிட்டனர். இந்நிலையில் சிந்துபாத் திரைப்படம் வெளியிடுவது தடைபட்டது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 27 என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜூன் 28 அன்று நான்கு படங்கள் திரைக்கு வருகின்றன. இவற்றில் யோகி பாபுவின் தர்ம பிரபு மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படமும் அடங்கும்.
சிந்துபாத் தயாரிப்பாளர்கள் செவ்வாயன்று ஸ்னீக் பீக் ஒன்றை வெளியிட்டனர், இது இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான வியூஸை அல்லியுள்ளது.