பத்திரிகையாளராக இருந்து உதவி இயக்குனர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட திறமையானவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் ஈ.வி.கணேஷ் பாபு இவர் தற்போது கட்டில் என்கிற படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு பிரபல எடிட்டர் லெனின் கதை திரைக்கதை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இந்த நிகழ்வில் செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன் கலந்து கொண்டு இந்த சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசும்போது, “தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது தந்தையை போலவே தமிழ் சினிமா பக்கம் எனது அன்பான பார்வையை செலுத்தி வருகிறார். தமிழ் சினிமாவுக்கு இன்னும் பல நல்ல திட்டங்களை கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார். திரைப்பட நகரம் புதுப்பித்தல் போன்ற புதிய திட்டங்கள் அடுத்து அடுத்து செயல்படுத்தப்பட உள்ளன என்று ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார்.

இந்த படத்தில் கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் மெட்டிஒலி சாந்தி மற்றும் சம்பத்ராம் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனரும் நடிகருமான ஈ.வி கணேஷ்பாபு பேசும்போது, “நானும் பத்திரிக்கையாளனாக இருந்து வந்தவன் தான். 2023ல் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் பீ.லெனின் அவர்கள் தான் அவரது ஊக்கத்தில் தான் இந்த திரைப்படம் நடந்தது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி.

ஶ்ரீகாந்த் தேவா இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார். சித் ஶ்ரீராம் மிக அரிதாக தேர்ந்தெடுத்து பாடல்கள் பாடுகிறார். எங்கள் படத்தில் நான்கு மொழிகளில் அவர் பாடித் தந்தது மகிழ்ச்சி. நடிகை சிருஷ்டி டாங்கே கட்டிலில் தமிழ் பெண்ணாகவே மாறி விட்டார். இந்த படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு இப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. நம் பாரம்பரியத்தை போற்றும் படமாக இப்படம் இருக்கும் என்றார்
நடிகை சிருஷ்டி டாங்கே பேசும்போது, “கட்டில் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. தமிழ் பாரம்பரியத்தை இந்தப் படம் எடுத்துக்காட்டும். இந்தப்படத்தை நான் மிகவும் நம்புகிறேன். இந்தப் பாடல்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்குமென நம்புகிறேன். இ.வி.கணேஷ்பாபு சார், லெனின் சார், ஶ்ரீகாந்த்தேவா சார், வைட் ஆங்கிள் ரவிசங்கரன் சார் இவர்கள் நால்வரும் தான் படம் சிறப்பாக வரக்காரணம்” என்று கூறினார்.