சமந்தா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான யசோதா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் சற்று பரபரப்பையும் ஏற்படுத்தியது. வாடகைத்தாய் விவகாரத்தில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் விதமாக இந்தப் படம் வெளியானது.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் சாகுந்தலம். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான குணசேகர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மலையாள திரையுலகை சேர்ந்த மோகன் தேவ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் மோகன்பாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகி உள்ள படம் என்பதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே அதிகமாக நிலவி வருகிறது.