இந்தியாவில் இதுவரை எந்தவொரு ஹாலிவுட் திரைப்படத்திற்கும் கிடைத்திராத மிகப்பெரிய வகையில், குடும்பத்தினர் கொண்டாடும் பொழுதுபோக்குப் படமாகவும் பிரம்மாண்டமான காட்சிகளைக் கொண்ட படமாகவும் இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்திருக்கிறது ‘அவதார்-2’.
தொடர்சியான விடுமுறைகள் மற்றும் ‘அவதார்’ படத்திற்கு எந்த ஒரு போட்டியும் வரும் வாரத்திலும் இல்லாததால் பாக்ஸ் ஆஃபிஸ் வரலாற்றின் பல சாதனைகளை முறியடித்து, புதிய பல சாதனைகளைப் படைத்து வருகிறது ‘அவதார்’ திரைப்படம்.
அந்த வகையில் இந்த திரைப்படம் இந்தியாவில் வெளியான பத்தே நாட்களில் ரூ. 300 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்ல உலக அளவில் இந்த பத்து நாட்களில் 7000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது இந்த திரைப்படம்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் ’அவென்ஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்திற்குப் பிறகு ‘அவதார்’ திரைப்படம் இரண்டாவது மிகப்பெரிய ஹாலிவுட் படமாக இந்தியாவில் உள்ளது.