தனது தந்தையைப் போலவே நடிப்பு மட்டுமில்லாமல் டைரக்ஷன், பாட்டு, இசை என பல துறைகளிலும் வித்தகராக இருப்பவர் நடிகர் சிலம்பரசன். குறிப்பாக படங்களில் அவர் பாடும் பாடல்களுக்கு ரசிகர்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு உண்டு. அதனால் அவரை மற்ற இயக்குனர்களும் ஹீரோக்களும் கூட தங்களது படங்களில் பாடச்சொல்லி அழைப்பது அவ்வப்போது நடைபெற்று வருகிறது .

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கில் கூட அவருக்கு வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது தெலுங்கு இளம் நடிகர் நிகில் சித்தார்த்தா நடித்துவரும் 18 பேஜஸ் (18 பக்கங்கள்) என்கிற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் சிம்பு.

ஸ்ரீமணி என்பவர் எழுதியுள்ள இந்த பாடலுக்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். நிகில் அனுபமா இருவரும் இணைந்து ஏற்கனவே சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கார்த்திகேயா-2 என்கிற படத்திளும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 18 பக்கங்கள் திரைப்படம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளது சிம்பு பாடிய பாடல் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகிறது