மாநாடு, வெந்து தணிந்தது காடு என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனது திரையுலக பயணத்தில் தற்போது முற்றிலும் ஒரு மாறுபட்ட பாதையில் பயணித்து வருகிறார் நடிகர் சிம்பு. சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை ராதிகா கூட, நான் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பாக அங்கே சிம்பு வந்து காத்திருந்தார்.. அந்த அளவிற்கு அவர் டோட்டலாக மாறிவிட்டார்.. இதை எப்போதும் மாற்றிக்கொள்ளாதீர்கள் சிம்பு என்று வியந்து கூறுமளவிற்கு இனி சினிமாவில் தான் பயணிக்க வேண்டிய விதம் இப்படித்தான் என புரிந்து கொண்டார் சிம்பு.
அந்தவகையில் அடுத்த வெற்றிக்கு அவர் அச்சாரம் இடும் விதமாக பத்து தல என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக கவுதம் கார்த்திக் நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க முக்கிய வேடத்தில் கலையரசன் நடித்துள்ளார்.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபிலி கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை படத்தின் நாயகன் சிம்புவுடன் இணைந்து படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன