தமிழ் திரையுலகில் மோசர்பேர் மற்றும் யூடிவி போன்ற பாலிவுட் நிறுவனங்கள் கால்பதித்தபோது அவற்றின் நிர்வாக தயாரிப்பாளராக திறம்பட பணியாற்றிவிட்டு, பின்னர் தனியாக தயாரிப்பு நிறுவனம் துவங்கியவர் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.
அதைத்தொடர்ந்து மிஸ்டர் சந்திரமௌலி, காற்றின் மொழி, கபடதாரி உள்ளிட்ட படங்களை தனது நிறுவனம் மூலம் தயாரித்தார். தற்போது நடிகர் விஜய் ஆண்டணியின் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி ஆகிய படங்களை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சரின் ஓரு பார்ட்னராக தயாரித்து வருகிறார்.

தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் பதவியில் இருக்கிறார். சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை அவரது எழுத்திற்காக வென்றிருக்கிறார். அதுமட்டுமல்ல தமிழ் சினிமாவில் புதிதாக தயாரிப்பில் நுழையும் பலருக்கும் இந்த துறை குறித்த நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்து அவர்களது படங்களின் வெற்றிக்கும் வியாபாரத்திற்கும் பக்கபலமாக இருந்து வருகிறார். மேலும் போப்டா என்கிற ஒரு திரைப்பட கல்லூரியையும் நடத்திவருகிறார் தனஞ்ஜெயன்.
தனஞ்ஜெயனின் இரண்டு மகள்களும் தங்களது மேல் படிப்பை (M.S. in Computers) USA -வில் முடித்துவிட்டு அங்கே தற்போது முன்னனி நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இரண்டு மகள்களது திருமணமும் இந்த வருடம் நவம்பர் – டிசம்பர் என ஒரு மாத இடைவெளியில் குடும்பத்தினரால் உறுதி செய்யப்பட்திருந்தது.

இந்த நிலையில் மூத்த மகளான ரேவதியின் மற்றும் மணமகன் அபிஷேக் குமார் இருவரின் திருமணம் நவம்பர் 20ஆம் தேதி அம்பத்தூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகர் சிவகுமார் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு திருமாங்கல்யத்தை மணமகன் அபிஷேக்கிடம் எடுத்து கொடுத்தார்.
இந்த நிகழ்வில் தமிழ் சினிமாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்