கடந்த வருடம் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிலும் ஸ்டைலிஷான வில்லனாக, காமெடி கலந்து நடித்து ஹீரோவுக்கு இணையான அல்லது அவரை விட சற்று அதிகமாகவே வரவேற்பைப் பெற்றவர் நடிகர் எஸ் ஜே சூர்யா.

அந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் எஸ்ஜே சூர்யா, முதன்முறையாக வதந்தி என்கிற வெப்சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப்சீரிஸிளும் அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.

கொலைகாரன் படத்தை இயக்கிய இயக்குனர் ஆண்ட்ரூ லுயிஸ் இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளார். தற்போது இந்த வெப்சீரிஸின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வரும் டிசம்பர் 2ஆம் தேதி இந்த வெப்சீரிஸ் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம்வேதா புகழ் இரட்டை இயக்குனர்களான புஷ்கர், காயத்ரி இந்த தொடரை தயாரித்துள்ளனர். அதுமட்டுமில்ல சமீபத்தில் சர்தார் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த கன்னக்குழி அழகி நடிகை லைலா இந்த வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கும் வெப்சீரிஸில் நடிப்பது இதுதான் முதல்முறை.

இவர்கள் தவிர சஞ்சனா, விவேக் பிரசன்னா மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.