V4UMEDIA
HomeNewsKollywoodகலகத்தலைவன் பார்த்து பாராட்டிய தமிழக முதல்வர்

கலகத்தலைவன் பார்த்து பாராட்டிய தமிழக முதல்வர்

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருண்விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்த தடம் என்கிற படம் வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்ததாக இவரது படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் அளவிற்கு அந்த படத்தின் மேக்கிங்கில் மிரட்டி இருந்தார் இயக்குனர் மகிழ்திருமேனி.

ஏற்கனவே இவரது தடையறத்தாக்க, மீகாமன் ஆகிய படங்களும் விறுவிறுப்பான கதை நகரும் பாணியிலேயே அமைந்திருந்தன, இந்த நிலையில் அவர் தற்போது உதயநிதியை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ள கலகத்தலைவன் திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படம் போதைப்பொருள் மாபியா கும்பல் பின்னணியில் நிகழும் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை தமிழக முதல்வரும் உதயநிதியின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்தினருடன் சிறப்பு காட்சியாக பார்த்து ரசித்தார்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர் படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் உதயநிதியின் நடிப்பு மற்றும் மகிழ்திருமேனி டைரக்சன் நிறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக “கலகத்தலைவன்” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார் வில்லனாக பிக்பாஸ் புகழ் ஆரவ் நடித்துள்ளார்.

Most Popular

Recent Comments