சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் டைரக்சனில் ஜெயிலர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் மிக முக்கியமான வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது.
அவரும் பல பேட்டிகளில் அந்த தகவலை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் சிவராஜ்குமார் கலந்துகொண்டு நடித்து வருகிறார் என அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப்படத்தில் வில்லனாக இல்லாமல் அதே சமயம் கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.