அசுரன் என்கிற சூப்பர்டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன், அடுத்ததாக இன்னும் பெரிய ஹீரோக்களை தேடிப்போவோம் என்று நினைக்காமல் விடுதலை என்கிற படத்தை நடிகர் சூரியை கதையின் நாயகனாக வைத்து இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

காமெடி நடிகர் சூரியை இந்த படம் வேறு ஒரு கோணத்தில் புதிய மனிதராக காட்டும் என்கிறார்கள் அதனால் தான் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட நாட்களை ஒதுக்கி நடித்து கொடுத்துள்ளார் சூரி.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்கப்பட்டு வரும் ஜனவரி 26ல் இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி ஆசிரியராகவும் சூரி போலீஸ் கான்ஸ்டபிள் ஆகவும் நடித்துள்ளனர்.