கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமான கதைகளில் நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படத்தில் வாடகைத்தாய் விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி செய்யும் வசதியான பெண்மணியாக நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார்.

தற்போது அதற்கு அப்படியே முற்றிலும் மாறாக தற்போது தான் நடித்துவரும் கொன்றால் பாவம் என்கிற படத்தில் கிராமத்தில் வீட்டில் அமர்ந்து உளுந்து உடைத்துக் கொண்டிருக்கும் வேலையை பார்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்தான்.

இந்த படத்தின் கதாநாயகனாக சின்னத்திரை புகழ் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார் இந்த படம் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் ஆஹா’ ஒரிஜினல் தளத்திற்காக தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ மோகன் ஹபு அவர்களின் பிரபலமான கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கன்னடம் தான் இதன் மூலக் கதை என்றாலும் தெலுங்கு மற்றும் தமிழிலும் தயாள் பத்மநாபனே இயக்குகிறார்.

இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்து அதன் பெரும்பாலான காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டிருந்தது.

























