பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் சமீபகாலமாக கார்த்தி நடிக்கும் படங்களின் டைட்டில்கள் வித்தியாசமாக அமைந்திருப்பதை கவனிக்கலாம். இதற்கு முன்னதாக சுல்தான், சமீபத்தில் வெளியான சர்தார் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது கார்த்தி நடித்துவரும் படத்திற்கு ஜப்பான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது,

இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்குகிறார். காதல் படமான குக்கூ மற்றும் சமூக கருத்தை மையமாகக் கொண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் தேசிய விருதுகளையும் பெற்ற ஜோக்கர் ஆகிய படங்களை தொடர்ந்து அவர் இயக்கும் படம் என்பதாலும் அதிலும் கார்த்தி நடிக்கிறார் என்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வழக்கமான தனது பாணியில் இருந்து மாறாமல் அதே சமயம் கார்த்தி படம் என்பதால் கமர்ஷியலாகவும் இந்த படத்தை ராஜூமுருகன் உருவாக்க உள்ளாராம். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.