விமல் நடித்த களவாணி என்கிற படம் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் சற்குணம். அந்தப் படத்தின் வெற்றியே அவரை பெரிய அளவிற்கு கைதூக்கி விட்டாலும் அதற்கு அடுத்து அவர் இயக்கிய வாகை சூட வா என்கிற திரைப்படம் தேசிய விருது பெற்று, சமூக அக்கறை கொண்ட இயக்குனர் என்ற அடையாளத்தையும் அவருக்கு பெற்றுத்தந்தது.

இதைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் சண்டிவீரன் என்கிற படத்தையும் இயக்கினார் சற்குணம். அதன்பிறகு ஒரு சில படங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அதர்வா இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் புதிய படம் ஒன்றை இயக்கி வந்தார் சற்குணம்.

இந்த நிலையில் அந்த படத்திற்கு பட்டத்து அரசன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அதர்வாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரன் நடித்து வருகிறார்.

நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காளே, தெலுங்கு நடிகர் சத்ரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘பட்டத்து அரசன்’ திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.