36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நெடிப்புக்கு திரும்பியுள்ள ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட இருபத்திஐந்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாள திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார் ஜோதிகா. அங்கே மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் காதல் தி கோர் என்கிற படத்தில் அவரது அவரது மனைவியாக நடிக்கிறார் ஜோதிகா.
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற, தற்போது தமிழில் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக்காக உருவாகியுள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய ஜியோ பேபி என்பவர்தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோதிகா இந்த படத்தின் படப்பிடிப்பு கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜோதிகாவின் மலையாள படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அவரது கணவரும் நடிகருமான சூர்யா நேற்று காதல் படப்பிடிப்பிற்கு திடீரென விசிட் அடித்தார்.
சூர்யாவின் வருகையை எதிர்பாராத படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். படக்குழுவினருடன் நன்கு பேசி மகிழ்ந்த சூர்யா அவர்களுக்காக படப்பிடிப்பு தளத்தில் சுவையான பிரியாணியையும் தன் கைப்பட செய்து கொடுத்து படக்குழுவினரை மகிழ்வித்தார். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகின்றன..