இந்தியா முழுவதும் தற்பொழுது சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரிலான படைப்புகளுக்கு பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடக்கம் முதல் இறுதிக் காட்சி வரை ரசிகர்களை ஈர்க்கும் இந்த வகையான திரில்லர் படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆனால் தமிழில் அல்ல இந்தியில். மாணிக் என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் அவரது கதாபாத்திர பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பாலிவுட்டில் மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான எண்டேமால் ஷைன் இந்தியா நிறுவனம், நட் மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது பாலிவுட்டில் தயாரானதும் தமிழ் இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகிறது

இந்தியில் வெளியான ‘லுடோ’, ‘ஜக்கா ஜாசூஸ்’ மற்றும் ‘சத்ரசல்’ ஆகிய படங்களின் கதாசிரியரான சாம்ராட் சக்கரவர்த்தி, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேசுடன் நடிகை சம்யுக்தா சண்முகநாதன், நடிகர் விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நைனிடாலில் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது