பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னிலியோன் கடந்த சில வருடங்களாக கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தமிழில் அவர் கதாநாயகியாக நடித்துள்ள படம் ஒ மை கோஸ்ட். இந்த படத்தில் நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடித்துள்ளார் மேலும் இப்படத்தில் தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் முக்கிய வேடத்தில் டிக்டாக் புகழ் ஜி பி முத்து நடித்துள்ளார்

இந்த படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஜிபி முத்து பேசும்போது நடிகை சன்னி லியோனுடன் நடித்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று கூறியவர் சன்னிலியோனுக்கு கேக் ஊட்டி விட வேண்டும் என விரும்பினார். அதன்படி சன்னிலியோனுக்கு அவர் கேக் ஊட்டிவிட, அவருக்கு சன்னிலியோன் கேக் ஊட்டி விட்டார்.

இந்த நிகழ்வில் நடிகர் சதீஷ் பேசும்போது, “இந்த படத்தின் கதையை இயக்குநர் கூறியபோது, அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அதில் சன்னி லியோன் நடிக்கிறார் என்ற உடன், நான் இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டேன். சன்னி லியோன் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்க நபர், அவரை நெருங்கவே நாங்கள் தயங்கி கொண்டு இருந்தோம். ஆனால் அவர் இலகுவாக மிக இயல்பாக எங்களிடம் பழகினார். அவர் இந்த படத்தில் மிகப்பெரிய அர்பணிப்பை கொடுத்துள்ளார். சிறப்பாக நடித்துள்ளார். அனைவரும் கடின உழைப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்

நடிகை சன்னி லியோன் பேசும்போது, “தமிழகம் வந்து உங்களை சந்திதது மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், அன்பும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. OMG திரைப்படத்திற்காக அனைவரும் கடின உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்துள்ளோம்.

இந்த படத்தை பார்க்க உங்களது நேரத்தையும் பணத்தையும் நீங்கள் ஒதுக்குவதற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எங்களது கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை”. என்று கூறினார்.