தமிழ் சினிமாவை இந்திய அளவிலும் இந்திய சினிமாவை உலக அளவிலும் கொண்டு சென்ற பெருமை ஒரே ஒருவருக்கு உண்டு என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மட்டும்தான். அவருக்கு பின்பே இந்திய சினிமா நட்சத்திரங்கள் அவர் போட்டு வைத்த பாதையில் உலக சினிமா அரங்கில் பிரபலமாக ஆரம்பித்தனர்.

குறிப்பாக ஜப்பானில் முதன் முதலாக இந்திய சினிமாவை அதிலும் தனது முத்து படம் மூலம் தமிழ் சினிமாவை கால் பதிக்க செய்து இன்று ஜாக்கி சானுக்கு இணையாக ஜப்பானிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உலகறிந்த செய்தி.
அந்த ஜப்பானிய ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் தமிழ்நாட்டில் வெளியாகும்போது இங்கே சென்னைக்கு வந்து படம் பார்த்து செல்கிறார்கள் என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே நடக்கக்கூடிய ஒரு அதிசய நிகழ்வு.

இந்த நிலையில் பாகிஸ்தானில் ஒரு ரசிகர் தன்னை சூப்பர் ஸ்டார் ரஜினி போலவே கருதிக்கொண்டு அவரது படத்தின் வசனங்கள் மேனரிசங்கள் ஆகியவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். இதற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்து வருகிறது.

பாகிஸ்தான் நாட்டின் பலோசிஸ்தான் மாநிலத்தின் குவெட்டா நகரத்தை சேர்ந்தவர் ரஹ்மத் காஷ்கோரி. 62 வயதான இவர் பாகிஸ்தானில் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உருவ தோற்றத்தை போன்றே, தான் இருப்பதால் ரஜினிகாந்த் போலவே தன்னுடைய நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொண்டார் ரஹ்மத்.
பாகிஸ்தான் மக்கள் ரஹ்மத்தை ‘பாகிஸ்தான் ரஜினிகாந்த் என்றே அழைக்கிறார்கள்.