தீபாவளி பண்டிகை ரிலீஸாக கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்த சர்தார் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இரும்புத்திரை பட புகழ் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கதாநாயகிகளாக ராசி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர்.
தீபாவளி அன்று வெளியான படங்களில் சர்தார் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இந்த படத்தின் வெற்றி சந்திப்பில் பேசும்போது கூட இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருக்கிறது என்கிற தகவலை இயக்குனர் பிஎஸ் மித்ரன் கூறினார்.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன் விலை உயர்ந்த கார் ஒன்றைப் பரிசளித்தார்.
இந்த காரின் சாவியை நடிகர் கார்த்தி மித்ரனிடம் வழங்கினார்.