Home News Kollywood துணிவு படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்

துணிவு படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் மூன்றாவதாக நடித்து வரும் படம் துணிவு. முதல் இரண்டு படங்களை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தான் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் இந்த படம் பொங்கல் ரிலீசாக வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது அதுமட்டுமல்ல இந்த படம் பொங்கல் வெளியீடு என்பதையும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பெரிய படங்களை வெளியிட்டு வரும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் துணிவு படத்தையும் வெளியிடுவதால் மிகப்பெரிய அளவில் தியேட்டர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..