V4UMEDIA
HomeNewsKollywoodமதுரையில் நடைபெற்ற பேட்டைக்காளி வெளியீட்டு விழா

மதுரையில் நடைபெற்ற பேட்டைக்காளி வெளியீட்டு விழா

வெற்றிமாறன் தயாரிப்பில் La ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் வெப் தொடர் பேட்டைக்காளி. இந்த தொடரில் கலையரசன், மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி, கிஷோர், வேலா ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கதாநாயகியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள முதல் வெப் தொடர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்க.து இந்த வெப் தொடரை ஆஹா தமிழ் ஓடிடி தளம் வெளியிடுகிறது.

இதன் முதல் எபிசோட் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் இதன் அடுத்தடுத்த எபிசோடுகள் வெளியாக இருக்கின்றன.

இந்த நிலையில் பேட்டைக்காளி’ வெளியீட்டு விழா மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் ஐடா ஸ்கடர் ஆடிட்டோரியத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடந்தது. இதன் ட்ரைய்லர் காட்சிகள் மற்றும் இதன் டைட்டில் பாடல் பார்வையாளர்கள் மத்தியில் ஹைலைட்டாக அமைந்தது.

இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் ‘பேட்டைக்காளி’யின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இந்த தொடர் பற்றி இயக்குனர் ராஜ்குமார் கூறும்போது ஆரம்ப காலத்தில் மனிதர்கள் காடுகளில் சுற்றித் திரிந்தனர். காளைகள் அவர்கள் வாழ்வில் வந்த பிறகுதான் விவசாயம் மற்றும் வளர்ப்பு பற்றி அவர்கள் அறிந்து கொண்டனர். எனவே, காளைகள் மக்களின் வாழ்வில் வந்த பிறகுதான் கலாச்சாரத்தின் வருகை ஏற்பட்டது.

முற்கால மனிதர்கள் காளைகளை அடக்கிய விதம் இன்றும் விளையாட்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் நாட்டிலேயே நம் மாநிலத்தில் மட்டும்தான் நடக்கிறது.

நமது கலாச்சாரத்தில் காளைகளின் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜல்லிக்கட்டு உலகில் சொல்லப்படாத கதைகளை ஆராய்வதற்காகவும் இந்த இணையத் தொடரை உருவாக்கி உள்ளோம்” என்றார்.

Most Popular

Recent Comments