V4UMEDIA
HomeNewsKollywoodதீபாவளி தினத்தில் இன்ப அதிர்ச்சியில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் யோகிபாபு

தீபாவளி தினத்தில் இன்ப அதிர்ச்சியில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் யோகிபாபு

தமிழ் சினிமாவில் தற்போது நிறைய காமெடி நடிகர்கள் இருந்தாலும் முன்னணியில் பிசியான காமெடி நடிகராக நடித்து வருபவர் நடிகர் யோகிபாபு. ஒரு பக்கம் நகைச்சுவை நடிகராகவும் இன்னொரு பக்கம் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து, அந்த படங்களிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார்.

கடந்த 2020-ல் கொரோனா ஆதிக்கம் நிலவிய காலகட்டத்தில் நடிகர் யோகிபாபு, மஞ்சு பார்கவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

இந்தநிலையில் நேற்று இன்று தீபாவளி திருநாளில் யோகிபாபுவுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. அந்த வகையில் இந்த தீபாவளி யோகிபாபுவுக்கு இன்ப அதிர்ச்சியாகவும் இரட்டிப்பு மகிழ்ச்சியாகவும் அமைந்துவிட்டது என்று சொல்லலாம்.

Most Popular

Recent Comments