தமிழ் சினிமாவில் நீண்டநாட்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்தநிலையில் தற்போது தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் அறிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேசமயம் இவர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து திருமணமான நான்கு மாதங்களுக்குள் குழந்தையா என்கிற சர்ச்சையும் தற்போது வெடித்துள்ளது.

தமிழக அரசு அதுகுறித்த ஆய்வுக்கும் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் இருவரின் செயலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் சிலர் அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் இந்த விவகாரம் பற்றி கூறும்போது, “தங்கள் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை தர காத்திருக்கும் அன்பான பெற்றோருக்கு ஒன்றுமறியா இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதைவிட வேறு என்ன அழகான விஷயம் இருக்கப்போகிறது..

மற்றவர்களின் இதுபோன்ற அழகிய தருணங்களை கெடுப்பதற்கு என்றே ஏதாவது செய்யும் நபர்களை நிச்சயமாக சட்டத்தின் விதிகளின்படி தண்டிக்கவேண்டும். லீகல் தெரியும், மெடிக்கல் தெரியும்னு சில மதிப்பில்லா கோமாளிகள் பேட்டிகள் கொடுப்பதையும் ட்வீட் போடுவதையும் பார்க்கும்போது இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.
கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு தெரியும் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது. பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறியுள்ளார்.