V4UMEDIA
HomeNewsKollywoodராம்-நிவின்பாலி படத்தலைப்பு ஏழு கடல் ஏழு மலை

ராம்-நிவின்பாலி படத்தலைப்பு ஏழு கடல் ஏழு மலை

தங்கமீன்கள், பேரன்பு என உணர்வுபூர்வமான படங்களை இயக்குவதற்கு பெயர் போனவர் இயக்குனர் ராம். தரமணி போன்ற அதிரடி படங்களையும் இயக்கினார். இந்த நிலையில் தற்போது மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின்பாலியை வைத்து தமிழில் படம் இயக்கி வருகிறார் இயக்குனர் ராம்.

மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்திற்கு ஏழு கடல் ஏழு மலை என டைட்டில் வைக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னதாக தமிழில் நிவின்பாலி கதாநாயகனாக நடித்த ரிச்சி என்கிற படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்தநிலையில் ராம் டைரக்ஷனில் அவர் நடித்து இருப்பதும் படத்தின் டைட்டிலே வித்தியாசமாக இருப்பதும் நிச்சயமாக இந்த படம் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை நிவின்பாலி கவர்வார் என்று நம்பலாம்.

Most Popular

Recent Comments