இந்த வருடம் கார்த்தியின் வருடம் என்று சொல்வதற்கு ஏற்ப விருமன், பொன்னியின் செல்வன் என தொடர்ந்து கார்த்தி நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றியை பெற்று வருகின்றன. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் ஆக நடித்த கார்த்தியின் நடிப்பு படத்தில் நடித்த மற்ற அனைத்து நடிகர்களையும் விட மிக அதிக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் இன்னும் இரண்டு வாரங்களில் தீபாவளி வெளியீடாக ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை இரும்புத்திரை படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கியுள்ளார் ரஜிஷா விஜயன், ராசி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான ஏறுமயிலேறி என்கிற பாடலை கார்த்தி பாடியுள்ளார். இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன்பு சகுனி படத்தில் இருந்து கார்த்தி அவ்வப்போது சில பாடல்களை பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..