கடந்த சில வருடங்களில் வெளியான படங்களை கவனித்துப் பார்த்தால் நம்பிக்கை தரும் நட்சத்திரமாக ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர்களில் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் முக்கியமானவர் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் அவர் நடித்த சில படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெறாமல் போனாலும் அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
சொல்லப்போனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர்களிலேயே அதிக வாய்ப்பை பெற்றவர் ஹரிஷ் கல்யாண் என்று சொல்லலாம். அதை தொடர்ந்து பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண்.
இந்த நிலையில் விரைவில் தான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ள ஹரிஷ் கல்யாண் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது மனைவி வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரை திருமணம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.